என் முதல் மற்றும் முதன்மை நண்பன்
எப்போதும் எனை அரவணைக்க விரித்தபடியே காத்திருக்கும் கரங்கள்
ஏமாற்றங்களுக்கு பிறகெல்லாம் என்னால் உட்கொள்ளப்படும் மருந்து
தேடும்போதெல்லாம் துணையாக வர நான் கண்டடைந்த உறவு
நான் பையித்தியமாக பயிற்றுவிக்கும் பள்ளி
என் பித்தம் தெளிய சிகிச்சை தரும் மருத்துவமனை
முன் ஜென்மங்களை கோடிட்டு காட்டும் பேனா
உறவுகளுக்கு பின்னால் ஒளிந்துருகும் வெறுமையை உடுருவி பார்க்க உதவும் கண்ணாடி
கால் உடைந்து போன என் மனதில் முளைத்த செட்டைகள்
நிசப்தத்தின் ராகங்களை இசைக்கும் கருவி
3 comments:
என் உணர்வுகளை
ஒட்டு கேட்டு
கவிதையாக்கியது
போல இருக்கிறது இந்த வரிகள்...
this is a good one...
என் மனம் உம்மோடு இணைந்து தவித்தது... முதல் வாசிப்பிலேயே!
Post a Comment