Sunday, August 10, 2008

கருப்பு வெள்ளை
கட்டைகளுக்கிடையே
உன் சிரிப்பொலி ஸ்வரத்தை
என் விரல்கள் தேடுகிறது

நீ

அழுவதை ரசிக்க

பெருக்கெடுத்து வரும்

என் கண்ணீர்

கிட்ட பார்வையால்
பாதிக்க படுகிறேன்
தூரத்தில் உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம்

Saturday, August 9, 2008

எட்டாம் ஸ்வர ஒலி

உன் மௌனம்

அரங்கேற்றம்

அறையில் செய்யும்
ஆயிரம் பயிற்சிகளும்
அவளுக்கு முன்
அரைகுறையாய் தான்
அரங்கேறுகின்றன

அடடே

உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
எழுதிய பின்பு தான் தெரிந்தது
அது கவிதை அல்ல
கவிதையின் விமர்சனம் என்று