Showing posts with label தனிமை. Show all posts
Showing posts with label தனிமை. Show all posts

Monday, September 29, 2008

தனிமை

என் முதல் மற்றும் முதன்மை நண்பன்

எப்போதும் எனை அரவணைக்க விரித்தபடியே காத்திருக்கும் கரங்கள்

ஏமாற்றங்களுக்கு பிறகெல்லாம் என்னால் உட்கொள்ளப்படும் மருந்து

தேடும்போதெல்லாம் துணையாக வர நான் கண்டடைந்த உறவு

நான் பையித்தியமாக பயிற்றுவிக்கும் பள்ளி

என் பித்தம் தெளிய சிகிச்சை தரும் மருத்துவமனை

முன் ஜென்மங்களை கோடிட்டு காட்டும் பேனா

உறவுகளுக்கு பின்னால் ஒளிந்துருகும் வெறுமையை உடுருவி பார்க்க உதவும் கண்ணாடி

கால் உடைந்து போன என் மனதில் முளைத்த செட்டைகள்

நிசப்தத்தின் ராகங்களை இசைக்கும் கருவி