Monday, September 29, 2008

நிழல்
அசையாதே
வரைந்தவன் வண்ணம் தீட்டாமல் விட்டுவிடனோ
என்று கேட்ட சிலருக்கு
உண்மை தெரிந்து விடும்
உன் புன்னகை எனக்கெதிரான பயங்கரவாதம்

நானோ அமைதியை விரும்பாதவனாய்
தனிமை

என் முதல் மற்றும் முதன்மை நண்பன்

எப்போதும் எனை அரவணைக்க விரித்தபடியே காத்திருக்கும் கரங்கள்

ஏமாற்றங்களுக்கு பிறகெல்லாம் என்னால் உட்கொள்ளப்படும் மருந்து

தேடும்போதெல்லாம் துணையாக வர நான் கண்டடைந்த உறவு

நான் பையித்தியமாக பயிற்றுவிக்கும் பள்ளி

என் பித்தம் தெளிய சிகிச்சை தரும் மருத்துவமனை

முன் ஜென்மங்களை கோடிட்டு காட்டும் பேனா

உறவுகளுக்கு பின்னால் ஒளிந்துருகும் வெறுமையை உடுருவி பார்க்க உதவும் கண்ணாடி

கால் உடைந்து போன என் மனதில் முளைத்த செட்டைகள்

நிசப்தத்தின் ராகங்களை இசைக்கும் கருவி

காற்றில் நறுமணம் இல்லை என்று

உன்னை சுவாசிக்கிறேன்